ஆண்மைக் குறைவென்றால் என்ன? அதன் காரணங்கள் யாவை?
ஆண்மை குறைவு என்பது உடலுறவு கொள்ளும் போது ஆண்குறி முழுமையான பலத்துடன் செயல்பட முடியாமல் இருப்பதும், அதாவது முழு விறைப்புத்தன்மை அடையாமல் சற்று நெகிழ்வாக இருப்பதும், உடலுறவு
கொள்ளும் ஒரு சில நொடிகளில் விந்து வெளியேறுவது போன்ற இன்னும் சில பிரச்சனைகள் ஆண்மை குறைவு ஆகும்.
நாம் அனைவரும் ஆண்மைக்குறைவு என்ற வார்த்தையை அதிகப்படியாக கேள்வி பட்டு இருப்போம். எந்த வகையான ஊடகங்களை எடுத்தாலும் ஆண்மை குறைவு சம்பந்தமான விளம்பரங்கள், அது சம்பந்தமான மருந்து
விற்பனை செய்வது போன்றவை வந்த வண்ணமே உள்ளன. மேலும் பலர் இந்த பாதிப்பு நமக்கு இருக்கிறதா என்ற பயத்திலும், சந்தேகத்திலும் இருக்கின்றனர்.இதன் காரணமாக இல்லற வாழ்க்கையில் மனைவியை திருப்தி படுத்த
முடியுமா என்ற மிகப்பெரிய மனக்குழப்பம் இருக்கிறது.
இல்லற வாழ்க்கையில் ஆண் பெண் இருவருக்கும் முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் தான். ஆணுக்கு டெஸ்டோஸ்டிரோன், பெண்களுக்கு புரோஜெஸ்டிரோனும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு
வகிக்கிறது. ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பித்தால் அதுவே ஆண்மை குறைவு ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் மாறி வரும் வாழ்க்கை முறையில் பல ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு உள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகிறது. ஆண்மை குறைபாடு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
அதனால் தங்கள் மனைவியை தாம்பத்ய வாழ்க்கையில் முழு திருப்தி படுத்த முடிவதில்லை. இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது. இதனால் இக்குறைபாட்டை சரி செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமை
ஆகும்.
ஆண்மைக்குறைவுகான அறிகுறிகளையும், அதற்கான காரணங்களைப்பற்றி கீழே காண்போம்.